Viral Video: வயலை தோண்டியவருக்கு கிடைத்த புதையல்- ஒரே நாளில் இளைஞருக்கு அடித்த ஜாக்போட்
வயலை தோண்டிய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்ட புதையலின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் நகை, பணத்தை மூட்டை கட்டி மண்ணுக்கு அடியில் புதைத்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
சில நாடுகளில் தங்க காசுகள் கூட புழக்கத்தில் இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை குழி தோண்டி புதைத்து வைத்தனர்.
அப்படி புதைத்து வைத்திருந்த நாணயங்களால் ஒருவர் கோடீஸ்வரரான கதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜாக்போட் அடித்த நாணயங்கள்
ப்ராஸ்பெக்டர் என்ற பெயர் கொண்ட நபரொருவர் இணையத்தில் பகிர்ந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.
வயல் வெளிகளை தோண்டும் போது அவ்வபோது அவருக்கு தனித்துவமான உலோகங்களான நாணயங்கள் கிடைத்துள்ளது.
அந்த நாணயங்கள் குறித்து விசாரித்த போது, அது பழங்கால நாணயம் என தெரியவந்துள்ளது. இந்த நாணயம் ஏல விற்பனையின் போது ரூ.15.74 லட்சத்துக்கு விற்பனையானது.
அதே போன்று மற்றுமொரு நாணயம் கடந்த 1816ஆம் ஆண்டில் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தால் அந்த நபருக்கு ரூ.3.12 கோடிக்கு ஏல விற்பனைக்கு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தை போன்று சமீபத்தில் ஒருவருக்கு கிடைத்த கடந்த 1921ஆம் ஆண்டு அமெரிக்காவின் “A” மற்றும் “M” எழுத்துக்கள் பொருந்திய நாணயங்கள் கிடைத்துள்ளது. இது ரூ.4.8 கோடிக்கு ஏலம் விற்பனையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |