இரண்டு திருமணம் செய்த நபர்... யார் வீட்டில் இருப்பது என வெடித்த பிரச்சனை
இரண்டு திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர், லாக்டவுன் காலம் என்பதால் யார் வீட்டில் தங்குவது என்று எழுந்துள்ள பிரச்சினை சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கிழக்கு மண்டல காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 வயதான நபர் ஒருவர் துணிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதையறிந்த முதல் மனைவி போலீசில் புகார் கொடுக்க, இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இரு குடும்பத்தினரிடமும் பேசி ஒவ்வொரு மனைவி வீட்டிலும் ஒரு வாரம் தங்கி கொள்ளும் படி பேசி விஷயத்தை சுமூகமாக முடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
ஊரடங்கு முடிந்த பின் தங்களது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இரு மனைவிகளும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த நபர் நிலைமையை சமாளிக்க ஊரடங்கு முடியும் வரை நண்பர் வீட்டில் தங்க முடிவெடுத்து நிலைமையை சமாளித்துள்ளார்.