நிறைமாத கர்ப்பிணியாக ஆசைப்பட்ட ஆண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெயிட்லாண்ட் ஹான்லே கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை அறிய விரும்பி ஒருநாள் கர்ப்பிணியாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்களும், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களும் ஆண்களுக்கு தெரியாது. தான் அப்பாவாகப்போகிறேன் என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெயிட்லாண்ட் ஹான்லே பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை அறிய விரும்பினார். இதன்காரணமாக 9-வது மாதத்தில் பெண்கள் இருப்பது போல் ஒருநாள் வாழ ஆசைப்பட்டுள்ளார்.
ஒரு பெரிய தர்பூசணியை எடுத்து தனது வயிற்றில் கட்டிக்கொண்டார். பேறு காலத்தில் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும் என்பதால் தனது மார்பில் சிறிய அளவிலான இரண்டு தர்ப்பூசணிகளை கட்டிக்கொண்டார்.
ப்ளாஸ்டிக் டேப்பை கொண்டு உடல் முழுவதும் கட்டிக்கொண்டு நேராக படுக்கைக்கு சென்று படுத்துவிட்டார். தன்னை ஒரு கர்ப்பிணி பெண் போல் பாவித்துக்கொண்டவர்.
படுக்கையில் இருந்து எழுந்திருக்க முற்படுகிறார்.பலமுறை எழுந்திருக்க முயன்றும் தோற்றுப்போனார் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை.
அந்த வீடியோவில் பேசிய மெயிட்லாண்ட் ஹான்லே, நான் உண்மையில் இது மிகவும் சாதாரணமாக இருக்கும் நினைத்தேன். கர்ப்பிணியாக இருப்பது சிரமம்தான் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.