சாலையில் பணத்தை பறக்கவிட்ட நபர்! இறுதியில் சிக்கி சின்னாபின்னமான சோகம்
உத்திர பிரதேசத்தில் காரில் செல்லும்போது ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட இளைஞரை காவல்துறை கைது செய்து, காரையும் கைப்பற்றியுள்ளது.
பணத்தை பறக்கவிட்டு காரில் சென்ற இளைஞர்
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுக்களை தெருவில் பறக்கவிட்டு, சைரன் பொருத்தப்பட்ட காரில், சைரனை ஒலிக்கச் செய்து சென்றுள்ள நிலையில், இதனை தனது நண்பர் மற்றொரு காரில் இருந்து காணொளி எடுத்துள்ள நிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறித்த காட்சி இணையத்தில் வைரலாகிய நிலையில், பொலிசார் குறித்த இளைஞரை வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.

"சாலையில் நீங்கள் ஸ்டண்ட் செய்ய நினைத்தால், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். உங்களை கைது செய்வதுடன் உங்களது காரும் பறிமுதல் செய்யப்படும்" என்று காவல்துறையினர் டுவிட்டர் பக்கததில் வெளியிட்டுள்ளனர்.
தனியார் வாகனங்களில் சைரனை ஒலிக்க செய்வது குற்றமாகும். மேலும், சக வாகன ஓட்டிகளை திசைதிருப்பும் விதமாக பணத்தினை தெருவில் வீசியதற்காக காவல்துறை அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
करोगे सड़क पे स्टंट तो हम करेंगे हंट।
— UP POLICE (@Uppolice) May 29, 2022
गाड़ी होगी ज़ब्त होगे हवालात में शंट।#RoadSafety #DriveResponsibly pic.twitter.com/hC5viffIx3