வயிற்றில் கேட்ட சத்தம்.. ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Kosovo வை நபர் ஒருவர் Nokia 3310 செல்போனை முழுவதுமாக விழுங்கிய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
2000ம் ஆண்டுகளின் புழக்கத்தில் இருந்த Nokia 3310 என்ற செல்போனையே அவர் விழுங்கியுள்ளார்.
33 வயது மதிக்கத்தக்க அந்தநபர், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார், வயிற்றில் இருந்து லேசான சத்தமும் வந்துள்ளது.
எனவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்போது தான், வயிற்றுக்குள் செல்போன் இருப்பது தெரியவந்துள்ளது, இதைப் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
இதன்படி அறுவை சிகிச்சை செய்து செல்போனையும் எடுத்தனர், இதுதொடர்பான புகைப்படங்களை மருத்துவர் பேஸ்புக்கில் வெளியிட வைரலாகி வருகிறது.