39 நாணயங்கள், 37 காந்தங்களை விழுங்கிய நபர்! விபரீத ஆசையால் வந்த வினை
டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞரின் குடலிலிருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் குடலில் நாணயங்கள், காந்தங்கள்
டெல்லியில் ஸ்கிசோஃப்ரினியா என்ற 26 வயது இளைஞர் ஒருவர் சர் கங்காராம் மருததுவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது வயிற்றினை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது குடலில் 39 நாணங்கள் மற்றும் 37 காந்தங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அதிலும் அவர் விழுங்கிய காந்தங்கள் அனைத்தும் வெவ்வேறான வடிவங்களைக் கொண்டுள்ளதாம். அதாவது பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அவர், துத்தநாகம் உடற்கட்டை உருவாக்க உதவும் என்று நினைத்து விழுங்கியுள்ளாராம்.
இதுபோன்ற பொருள்களை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது, இப்படிச் செய்யவே கூடாது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என மருத்துவர் கூறியுள்ளார்.
குறித்த நபருக்கு 20 நாட்களாக வாந்தி வயிற்று வலி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் 22 நாட்களுக்கு முன்பு காந்தம் நாணயம் இவற்றினை சாப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |