மாரடைப்பால் தலை சாய்ந்த நபர்! உயிரைக் காப்பாற்றிய மருத்துவரின் திக் திக் காட்சி
இன்று வயது வித்தியாசமின்றி பலரின் உயிரை காவு வாங்கும் நோயாக இருக்கின்றது மாரடைப்பு.
ஆம் அன்றாட உணவு பழக்கவழக்கங்களை சரியாக கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி சரியாக கடைபிடிப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது.
இங்கு மருத்துவர் முன்பு அமர்ந்திருக்கும் நோயாளி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தலை சாய்க்கும் காட்சி இணையத்தில் வெளியாகி மனதை பதற வைத்துள்ளது.
குறித்த காட்சியில் மருத்துவர் எதிரே இரண்டு நபர்கள் அமர்ந்திருக்கின்றனர். வலது பக்கமாக வந்த பெண் ஒருவர் மருத்துவரிடம் வந்து எதோ கேட்டுவிட்டு சென்று அருகில் இருக்கையில் அமர்கின்றார்.

பின்பு மருத்துவரிடம் எதிரே இருக்கும் இரண்டு நபர்களில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில், மற்றொரு திடீரென தலை பின்னோக்கி சாய்கின்றது.
உடனே நொடியில் சுதாரித்த மருத்துவர் குறித்த நபரை முதலுதவி செய்து இதயத்தை இயக்கியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையல் மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.