மின்னல் தாக்கி நொடிப்பொழுதில் சரிந்த மனிதர்: பதபதைக்க வைக்கும் காட்சி
ஜகார்த்தாவில் உள்ள நிறுவனத்தில் காவலராகப் பணிபுரியும் 35 வயது நபர் ஒருவர் பணியில் இருந்தபோது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபர் ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில், கனரக இயந்திரங்கள் தொடர்பான நிறுவனத்தில் காவலராக பணிபுரிகிறார். அவர் ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியது.
உள்ளூர் ஊடகங்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் அந்த நபர் திறந்த வெளியில் நடந்து செல்வதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு, ஒரு மின்னல் அந்த நபரைத் தாக்கியதையும் தீப்பொறிகள் வீடியோவில் பறப்பதையும் காணலாம்.
மின்னல் தாக்கியதை தீப்பொறிகள் பறந்ததன் மூலம் உணரலாம். உடனே அந்த, நபர் மயங்கி தரையில் விழுந்து கிடப்பதைக் காணலாம். பாதுகாவலர் தரையில் விழுந்த உடன், அவரது சக ஊழியர்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்து அவருக்கு உதவ கிட்டத்தட்ட ஆறு பேர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
அந்த நபர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரது கையில் சில தீக்காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அவர் உயிர் பிழைத்துள்ளார். முதலில் கையில் தீக்காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நான்கு நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து உடல் நலம் தேறி வருகிறார்.
பாதுகாவலரின் கையில் வாக்கி டாக்கி இருந்ததால் மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர். குடையை எடுத்துச் செல்வதும், மின்னல் தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றும் சிலர் ஊகித்துள்ளனர்.
Security officer in Jakarta was struck by lightning while on duty, avoid using radio and cellular telephones when it is raining, the condition of the victim survived after 4 days of treatment. not everyone has the same chance to live. 当選確率 #Bitcoin #NFTs $BTC $ETH #ALERT pic.twitter.com/4XhW6Oh3U9
— Lexus RZ (@Heritzal) December 26, 2021