நெஞ்சை உறைய வைக்கும் திக் திக் வீடியோ! நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்
இந்தியாவின் மங்களூருவில் நொடிப்பொழுதில் சாலை விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
மங்களூருவில் Eliyar Padavu என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது, தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அருகில் பைக்கில் இளைஞர் வருவதை கவனிக்காமல் U-Turn போட்டுவிட, இளைஞரும் வேகமாக வந்துகொண்டிருக்கிறார்.
ஒருநிமிடம் சுதாரித்த டிரைவர், சட்டென பேருந்தை நிறுத்துகிறார், இல்லையென்றால் நிச்சயம் விபத்து நடந்திருக்கும்.
பைக்கில் வந்த இளைஞரும் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள கட்டிடத்துக்கு அருகே சென்று மரத்துக்கு நடுவே செல்கிறார், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
நெட்டிசன்கள் பலரும், இரு இருவரது தவறு தான், அதீத வேகம் ஆபத்தான ஒன்று, U-Turn போடும்போது எந்தவித சமிஞ்கைகளும் இல்லாமல் செல்வதும் தவறு தான் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Viral video of a young man who was speeding on a scooter and miraculously avoided colliding with a bus that was taking a U-turn near Elyarpadavu, Mangalore. ???
— Mangalore City (@MangaloreCity) January 11, 2022
The scooter then hits the door of the fish processing unit and passed in between a shop and a tree. ? pic.twitter.com/c4vAvbbikj