உறவின் போது நடந்த விபரீதம்: நீளவாக்கில் உடைந்த வாலிபரின் ஆணுறுப்பு
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது, ஆணுறுப்பு நீளவாக்கில் முறிந்துள்ளது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆணுறுப்பில் எலும்பு கிடையாது. தசைகள், நரம்புகள், ரத்த நாளங்களை மட்டுமே கொண்டது. ஆனால், பாலியல் உறவின்போது ஏற்படும் கடுமையான விரைப்பு தன்மையால் பல ஆண்களின் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்ட சம்பவங்கள் உலகளவில் அதிகளவில் நடந்து வருகின்றன.
ஆனால், ஆணுறுப்பின் குறுக்காக இந்த முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இதை பிளவு என்றும் கூறலாம்.
ஆனால், உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனை சேர்ந்த 40 வயது நபருக்கு, ஆணுறுப்பின் நீளவாக்கில் 3 அங்குலம் நீளத்துக்கு பிளவு ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘‘பாலியல் உறவின் போது இவருக்கு மிகவும் அதீத விரைப்புத் தன்மையால் நீளவாக்கில் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அந்த நேரத்தில் அந்த உணர்வோ, வலியோ அவருக்கு தெரியவே இல்லை. பாலியல் உறவு முடிந்த பிறகுதான் வலி தெரிந்துள்ளது.
மேலும், அவருக்கு வீக்கமும் அதிகமாகி இருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு அவர் குணமாகி, தற்போது போன்றே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
நீளவாக்கில் பிளவு ஏற்பட்டு இருப்பது, மருத்துவ உலகின் ஒரு அதிசயமாகவே கருதப்படுகிறது. வழக்கமாக, பாலியல் உறவின்போது ஆணுறுப்பின் குறுக்காக முறிவுகள் ஏற்படும் போது, சம்பந்தப்பட்ட நபரால் அதன் வலியை உடனடியாக உணர முடியும்,’’ என்றனர்.