இளைஞர் கொடுத்த புகார்... ஆடிப்போன பொலிசார்! நள்ளிரவில் அரங்கேறிய வன்கொடுமை?
இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேய்க்கள் தன்னை வன்கொடுமை செய்துள்ளதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 35 இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.
அப்புகாரில் தான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னை பேய்கள் கூட்டம் வன்கொடுமை செய்ததாகவும், அதில் இரண்டு பேய்கள் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஆதலால் பேய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு, குறித்த இளைஞர் பார்ப்பதற்கு பதட்டதுடன் இருந்ததால், அவரை சமாதானம் செய்வதற்காக பொலிசார் வழக்கு பதிவு செய்வதாக ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அந்த இளைஞர் யார்? ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவரா என பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், அந்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாகவும், கடந்த 10 நாட்களாக அவர் மருந்து மாத்திரை எதுவும் சாப்பிடாததால் இப்படி பேசி இருக்கலாம், அவர் காவல் நிலையத்திற்கு வந்ததே எங்களுக்கு தெரியாது என அந்த இளைஞரின் குடும்பத்தினர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.