கிட்னியை கொடுத்த காதலன்... அல்வா கொடுத்துவிட்டு சென்ற காதலி; கதறும் காதலனின் பரிதாப நிலை!
மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசித்து வரும் உசீல் மார்டினெஸ் (Uziel Martínez) என்பவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
உயிருக்கு உயிராக காதலித்த அப்பெண்ணி தாய்க்கு கிட்னி தேவைப்பட்டுள்ளது. இதனை அறிந்த காதலன் கிட்னியை தானாமாக கொடுத்துள்ளார்.
ஆனால், காதலி அப்ரேஷன் முடிந்த ஒரு மாதத்திலேயே காதலனை பிரேக் அப் செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவம் காதலனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதனால் மனமுடைந்து போன காதலன் டிக்டாக் வீடியோவில் புலம்பி வருகிறார். மேலும் டிக்டாக் வீடியோவில் இதைபற்றி பேசுகையில் “என் காதலியின் தாய்க்கு கிட்னி தேவைப்பட்டது.
ஆனால், சரியான டோனர் கிடைக்காததால் நானே எனது கிட்னியை காதலியின் தாய்க்கு கொடுத்தேன். ஆப்ரேஷனும் வெற்றிகரமாக முடிந்தது.
ஆனால், ஒரு மாதத்திலேயே காதலி என்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என கண்ணீர் மல்க டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு புலம்பி வருகிறார். இந்த வீடியோவை சுமார் 1.4 கேடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.