நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்! கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ஹீரோ- குவியும் பாராட்டுகள்
அமெரிக்காவில் சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதை கண்ட நபர்கள், உடனடியாக அந்த காரிலிருந்து முதியவர்களை மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 6ம் தேதி கலிபோர்னியாவின் Lakeside நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட பலரும் நெகிழ்ச்சியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து முதியவர்களை மீட்டவர்கள் கூறுகையில், காரிலிருந்து பாரிய புகை வருவதை கண்டதும் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
எங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாது உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.