இடுப்பில் கைவைத்து அரங்கேறிய சில்மிஷம்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை உடைத்த உண்மை
பாக்கியலட்சுமி சீரியலில் செழியனுக்கு மனைவியாக நடித்து வரும் நடிகை திவ்யா விமானத்தில் தனக்கு நடந்த சில்மிஷத்தினை உடைத்துள்ளார்.
நடிகை திவ்யா கணேஷ்
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் திவ்யா கணேஷ், கடந்த 2015ம் ஆண்டு பிரபல ரிவியில் ணளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் நடித்த சுமங்கலி தொடர் தான் திவ்யாவை பேமஸ் ஆக்கியது. அந்த சீரியலில் அனு சந்தோஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யா.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ரசிகர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட போது, தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலைக் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ஒருநாள் இரவு நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வரும்போது, என் இடையில் ஏதோ ஓடுவதுபோன்று ஒரு உணர்வு இருந்தது. இதையடுத்து பார்த்தபோது எதுவுமே இல்லை.
பின்னரும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்ட போது தான், அருகில் இருந்த நபர் கேவலமான செயலை செய்துள்ளார். உடனே கோபமடைந்த நான் பளார் பளார் என்று அறைந்துள்ளார்.
இதுபோன்று சம்பவம் உங்களுக்கு நடந்தாலும் நீங்களும் பொறுத்துக்கொள்ளாமல் உடனே தக்க பதிலடி கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.