ஓடும் ரயிலுக்கு கீழே படுத்து வீடியோ எடுத்த நபர் உயிர் பிழைத்தாரா? வைரல் காணொளி
ரயிலுக்கு கீழ் படுத்துக்கொண்டு ரீல்ஸ் காக இளைஞர் ஒருவர் செய்யும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இன்றைய இளைஞர்களில் மத்தியில் அதிகமாக உள்ளது.
அதற்காக பலரும் ஆபத்தான மற்றும் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய செல்ஃபி கலாச்சாரத்தால் பல உயிர்கள் பலியானது நினைவிருக்கலாம்.
இப்போது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒரு இளைஞர், அதிவேகமாக பாயும் ரயிலின் கீழ் படுத்துக் கொண்டு வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த அசட்டுத்தனமான செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குறித்த வீடியோ எங்கு யாரால் எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
Look at this idiot . Betting his life to impress few ! pic.twitter.com/ZTtxKsP7tH
— Prashanth Rangaswamy (@itisprashanth) July 21, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |