காதலியின் அறையில் இருந்து கொண்டே கோடி கோடியாய் சம்பாதித்த நபர்! அதுவும் இப்படியா?
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர், வெறும் படுக்கையறையில் படுத்துக் கொண்டே கோடிக்கணக்கில் சம்பாதித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட், ஐடி ஊழியரான இவர் ஊரடங்கு நேரத்தில் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்டார்.
அந்நேரத்தில் சும்மா இருக்காமல் App ஒன்றை டிசைன் செய்துள்ளார், 2018ம் ஆண்டே இதுபற்றி ஐடியா இருந்தும் நேரம் கிடைக்காமல் தவித்துள்ளார்.
இதனால் ஊரடங்கு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, வெற்றிகரமாக டிசைன் செய்து முடித்ததுடன் Hopin என பெயரிட்டார்.
இதனை வெளியிட்ட நிலையில், மக்கள் அமோக வரவேற்பு வழங்க, இந்த App-பை சுமார் 50 லட்சம் பேர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
தற்போது இதன் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இந்நிலையில் ஜானி இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராகவும் மாறிவிட்டார்.
