6 மணிநேரம் மட்டுமே நினைவாற்றல் இருக்கும்! நிஜத்தில் ஒரு கஜினியாக வாழும் நபரின் சோக சம்பவம்;
இந்த பறந்து விரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வினோத சம்பவம் நடைபெறுவது உண்டு. அவை விசித்திரமாகவும், நம்பகத்தன்மையாகவும் இருக்ககூடும்.
அந்த வகையில், தமிழ் பட கஜினி பட பாணியில் இளைஞருக்கு நினைவாற்றலை இழக்கும் சம்பவம் ஜெர்மனியில் நிகழ்ந்து இருக்கிறது. அந்த சம்பவத்தில் விபத்தில் சிக்கிய அவருக்கு 6 மணி நேரங்கள் மட்டுமே தன் வாழ்க்கையில் நடந்தது நினைவில் இருக்கிறது. திடீரென இவர், தனது மனைவி, மகனை கூட மறந்துவிடுகிறார்.
அவரின் வாழ்க்கை எப்படிப்பட்ட சூழலில் நகர்கிறது, என்ன சவால்களையெல்லாம் சந்திக்கிறார். இந்த ஞாபகமறதியால் அவர் வாழ்க்கையில் இழந்தது குறித்து அந்த டாகுமெண்ட்ரியில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த டேனியல் (Daniel Schmidt) 6 ஆண்டுக்கு முன் தன் சகோதரியை காண காரில் புறப்பட்டு சென்று இருக்கிறார். அப்போது கார் நெரிசலில் சிக்க, அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று பலமாக தாக்கி இருக்கிறது.

இந்த விபத்தினால் தான் டேனியல் நினைவாற்றல் 6 மணிநேரமாக சுருங்கி உள்ளது. இந்த தகவலை கூட அவர் அடிக்கடி டைரில் குறிப்பிட்டதால் தான் அறிந்துகொண்டார். விபத்துக்கு பின் பல சிகிச்சைகள் அளித்து அவரின் உயிரை காப்பாற்றினாலும், அவரின் நினைவாற்றலை திரும்ப மருத்துவர்களால் கொண்டு வர முடியவில்லை.
இந்த சம்பவத்தால், பெரிதும் பாதிக்கப்பட்ட இவர், முன்னாள் காதலியான கத்ரினாவிடம், தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும் தன்னுடைய நினைவாற்றல் குறித்தும் பேசிய டேனியல், உன்னை தொடர்ந்து மூன்று நாட்கள் பார்க்காமல், பேசாமல் இருந்தால் என்னால் உன்னை யாரென்றே அறிய முடியாது என தெரிவித்திருக்கிறார்.
மேலும், மூன்று நாட்களுக்கு பின் கத்ரினாவை பார்ப்பதாக இருந்தால் அது தான் அவரை பொறுத்தவரையில் முதல் சந்திப்பாக இருக்கும். பின்னர், டேனியலுக்கும், கத்ரினாவுக்கும் சில ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் குழந்தையை கூட அவரால் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாததால், இது தான் என் வாழ்க்கையின் மோசமான நிலை எனக்கூறியுள்ளார்.
இவரை போல கஷ்டப்படும் நபர்களுக்கு உதவுவதையே தன் வாழ்க்கையின் அடிப்படையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்.