8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் மனிதர்: காதலில் விழுந்தது எப்படி?
தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை மணந்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அத்தனை மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடனும், இருக்கின்றனர். சோரூட் தனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துள்ளார்.
இவரது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரியும் முன்பே அவரை திருமணம் செய்துவிட்டார்.
மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரது 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்துள்ளார். அவரது எட்டாவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் பார்த்துள்ளார்.
அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வருவது இல்லையாம்.
அதற்கு முக்கியமான காரணம் சோரூட்டின் குணம் தான் என சொல்லப்படுகிறது அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை காட்டுவாராம்.
ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் "அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது" என்பது தானாம். இரவில் தூங்கும் போது தினமும் ஒவ்வொருவருடன் தனது நேரத்தினை செலவிடுவாராம்.

