தற்செயலாக சந்தித்த மனிதனும்,சிங்கமும் - கடைசியில் நடந்ததை முடிந்தால் சிரிக்காம பாருங்க
ஒரு சிமென்ட் தொழிற்சாலை வளாகத்திலிருந்து நபர் ஒருவர் வெளியே வரும்பொழுது காட்டில் இருந்து ஒரு பெண் சிங்கமும் வருகிறது.
வைரல் வீடியோ
குஜராத்தில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் ஒரு மனிதனுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான எதிர்பாராத சந்திப்பு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது.
காணொளியில் பதிவாகி இருக்கும் அந்த நபர் தொழிற்சாலை வளாகத்திலிருந்து சாதாரணமாக வெளியே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில், ஒரு சிங்கம் மற்றொரு திசையிலிருந்து நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். காணொளியை பார்க்கும் நாம் நினைப்போம் அந்த சிங்கம் அவரை கடித்து ஒரு வழி செய்யப்போகின்றது என்று.
ஆனால் அது தான் இல்லை. அவர்கள் நேருக்கு நேர் வந்து பீதியடைந்து, அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இந்த காணொளியை ஆரம்பத்தில் பார்க்கும் போது எதிர்பார்த்திருக்க மாட்டோம். இதை பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை.
Worker of the cement factory at Junagarh & a free roaming lion accidentally meet each other. Both panic.
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 10, 2025
You have just witnessed the rare reverse chase 😀 pic.twitter.com/W4ps2NJl0S
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |