ராஜநாகத்தின் தலையில் முத்தமிடும் நபர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ
கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ், ராஜநாகத்தின் தலையில் முத்தமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது.
யார் இந்த வாவா சுரேஷ்?
கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர், சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்புகள் வரை அரிய வகை பாம்புகளை பிடிப்பதுடன் அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதுவரையிலும் சுமார் 38,000 பாம்புகளை பிடித்துள்ளார், கடந்த ஜனவரி மாதம் பாம்பை பிடிக்க முயன்ற போது அது தீண்டிவிட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை வெற்றிகரமாக முடிய, மீண்டும் பாம்புகளை பிடிக்கத் தொடங்கிவிட்டதாகவும், தன் வாழ்நாள் முழுதும் சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.
ராஜநாகத்துக்கு அன்பான முத்தம்
தற்போது வெளியான வீடியோவில், ராஜநாகம் படமெடுத்து நிற்க அதன்பின்னால் பாம்பின் அசைவுகளுக்கு ஏற்றவாறு மிக மெதுவாக அதன் அருகில் சென்று முத்தமிடுகிறார் வாவா சுரேஷ்.
Saurabh Jadav என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ, பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.