Viral Video: 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பின் தலையில் முத்தமிட்ட நபர்
12 அடி நீளமுள்ள ராஜா நாகப்பாம்பின் தலையில் முத்தமிட்ட மனிதனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
12 அடி நாகப்பாம்பின் முத்தமிட்ட மனிதன்
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், பெரும்பாலானோர் பாம்புகளுக்கு பயப்படுவதே கிடையாது. சிலர் பாம்புகளை வணங்குகிறார்கள் மற்றும் சிலர் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள். இன்னும் சிலரோ பாம்பை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நிக் என்ற நபர் 12 அடி நீளமுள்ள ராஜா நாகப்பாம்பை கவனமாகப் பிடிக்கிறார். பின்னர் ஒரு கணம் அசையாமல் நின்ற அப்பாம்பின் தலையின் பின்னால் முத்தம் கொடுத்து விட்டு போஸ் கொடுக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அய்யோ... ஒரு நிமிடம் இந்த வீடியோவைப் பார்த்த எனக்கு இதயமே நின்றும்படி இருக்கு என்றும், நான் அவரை பார்க்கும்போது பதட்டமடைகிறேன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.