குக்கரால் காதலியை அடித்துக் கொன்ற காதலன்... அதிர்ச்சியளிக்கும் காரணம்
பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த லிவ் இன் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த காதலியை காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குக்கரால் கொலை செய்யப்பட்ட காதலி
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் (29) மற்றும் தேவா (24) இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் ஒன்றாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கல்லூரியிலிருந்து ஒருவரை ஒருவர் பழகிய நிலையில், தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தேவா கொச்சியையும், கொலையாளி வைஷ்ணவ் திருவனந்தபுரத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் வைஷ்ணவ், தேவாவை பிரஷர் குக்கரை வைத்து தாக்கி கொலை செய்துள்ளார். தேவாவின் தங்கை அக்காவை தொடர்பு கொண்ட போது எந்தவொரு பதிலும் இல்லை, என்பதால் பக்கத்து வீட்டுக்காரரை தொடர்பு கொண்டு பேசிய போது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
கொலைக்கு பின்பு வைஷ்ணவ் தப்பி ஓடிய நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இருவரும் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தது அவர்களது பெற்றோருக்கு தெரியும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
வைஷ்ணவ் தேவாவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளதாகவும், அக்கம் பக்கத்தினரும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
வைஷ்ணவ் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |