மனைவியின் தங்கை மீது காதல்: கண்ணை மறைத்த ஆசை! நால்வர் பரிதாப மரணம்
இந்தியாவில் கொழுந்தியாள் மீது கொண்ட காதலால் நபர் ஒருவர் நால்வரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
நாக்பூரை சேர்ந்தவர் மாதுர்கர்(வயது 36), இவருக்கும் விஜயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பரி மற்றும் சாஹில் என இரண்டு குழந்தைகள் இருக்கிறது, இந்நிலையில் விஜயாவின் தங்கையான அமிஷா போப்டே அக்காவின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கேயே தங்கியிருந்து தையல் கற்றுக்கொண்டிருந்தார், இந்நிலையில் மாதுர்கருக்கு அமிஷா மீது ஆசை வந்துள்ளது.
இதனால் மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இந்த விவகாரம் விஜயாவுக்கு தெரியவர, சண்டை மூண்டுள்ளது, அடிக்கடி சண்டை நடந்ததால் கடும் கோபத்தில் இருந்த மாதுர்கர், சம்பவதினத்தன்று மனைவி, கொழுந்தியாள் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மறுநாள் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது நால்வர் சடலமாய் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.