மாமனாரை நடுரோட்டில் அடித்து கொலை செய்த மருமகள்: உதவியாக இருந்த மகன்
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக மகனும், மருமகளும் சேர்ந்து அப்பாவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அணைபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஆறுமுகம் மற்றும் சண்முகம் . ஆறுமுகத்தின் மூத்த மகன் பொன்வேல் அவரது மனைவி சரோஜா. இவர்கள் சொத்து பிரச்சனை காரணமாக ஆறுமுகத்துடன் நேற்று காலை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு உதவியாக பொண்ணு வேலின் மைத்துனர் மணிகண்டனும் ஆறுமுகத்துடன நிலப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பொன்வேல் அவரது மனைவி சரோஜா மற்றும் அவரது மைத்துனர் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டைகளை எடுத்து வந்து ஆறுமுகத்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனைப் பார்த்த சண்முகம் என் அண்ணனை அடிக்காதீர்கள் என்று தடுத்துள்ளார். ஆனால் அவரையும் மருமகள் மகன் உள்ளபட மூன்று பேரும் சரமாரியாக தாக்க முயன்றுள்ளனர். இதனால் பயந்து போன அவர் தப்பித்து ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்த பொழுது அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
உறவினர்கள் அனைவரும் வந்து பார்த்த போது ஆறுமுகத்தை கொலை செய்த அனைவரும் அவர்களது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதனிடையே வீட்டின் முன்பாக நின்றிருந்த பொன்வேலின் மைத்துனர் மணிகண்டன் மீ உறவினர்கள் தாக்குதல் நடத்தினர் .
இதனிடையே தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் நேரில் வந்து மணிகண்டனை காப்பாற்றி வாகனத்தில் ஏற்றினர். வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சொத்து தகராறில் தந்தையை செய்த பொன்வேல். அவரது மனைவி சரோஜா, சரோஜாவின் தம்பி மணிகண்டன் ஆகிய 3 பேரை பிடித்த வேடசந்தூர் போலீசார், அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.