கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்ட கணவன்! ஆண் குழந்தை பிறக்கும் என்ற அவலம்
ஆந்திராவில் கர்ப்பிணி மனைவிக்கு கணவர் எச்ஐவி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவிக்கு எச்ஐவி ஊசி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரண், மாதவி இருவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு 5 வயதில் குழந்தையும் உள்ளதுடன், இரண்டாவதாக கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், சரணுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்.
இதற்கு மனைவி ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதை அறிந்த சரண், தனது சகோதரர்களுக்கு ஆண் குழந்தை இருப்பதாகவும், நமக்கும் அடுத்து பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க மருத்துவரிடம் மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மருந்து, மாத்திரை, ஊசி என்று செலுத்தப்பட்ட நிலையில், அதன் பின்பு மாதவிக்கு உடல்நலம் சரியில்லாமல் சென்றுள்ளது. பின்பு தான் கணவர் தனக்கு எச்ஐவி தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில், அவர்களின் விசாரணையில், திருமணத்திற்கு பெண் வீட்டினர் 20 லட்சம் ரொக்கமும், நிலத்தையும் வரதட்சணையாகக் கொடுத்துள்ளார்கள்.
இதற்கு பின்பும் பணம் வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு கேட்டுள்ளனர். இதனை பெண் வீட்டினர் கொடுக்க முடியாததால் வேறு பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளாராம்.