மண்ணுக்குள் தெரிந்த கை விரல்கள்... தோண்டிய விவசாயிக்கு கிடைத்த ஆச்சரியம்
சீன விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் அறுவடை செய்த போது அங்கு மனித கை மறைந்திருப்பதாக நினைத்து தோண்டியதில், அதே வடிவத்தில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கை வடிவத்தில் சேனைக்கிழங்கு
சீனாவில் குவாங்டாங் மகாணத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை எடுக்க சென்றுள்ளார். அப்பொழுது நிலத்தினை தோண்டிய போது கை போன்ற வடிவம் தென்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் விரல்கள் முதலில் தோன்றவே மனித உடம்பாக இருக்குமோ என்ற பயத்தில் தோண்டிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது கை வடிவத்தில் சேனைகிழங்கு முளைத்திருப்பதை அறிந்த அவர் அதனை பக்குவமாக வெளியே எடுத்துள்ளார்.
மிகவும் அரிதாக ஐந்து விரல்கள் மற்றும் நகங்களைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட இந்த கிழங்கை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு வியந்து வருகின்றனர்.

மதிப்பு என்ன?
இந்த அரிய வகை கிழங்கினை நபர் ஒருவர் 1 லட்சம் யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 லட்சம் கொடுத்து வாங்க முன்வந்துள்ளார்.
ஆனால் குறித்த விவசாயி விற்பனை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் இந்த காணொளியினை குறித்த விவசாயின் நண்பர் படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |