எதிர்பாராமல் நடந்த அசம்பாவிதம்: நொடிப்பொழுதில் உயிர்தப்பிய இளைஞரின் திக் திக் காட்சி
பிறப்பு இறப்பு எப்படியோ, அதுபோல ஒருவருக்கு வரும் அதிர்ஷ்டமும் எப்போது வரும் என்று தெரியாது. ஒருவருக்கு வரும் அதிர்ஷ்டம் பொருளாக வரலாம், கட்டிய மனைவியாக, தாயாக, தந்தையாக என எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். அல்லது, ஏதாவதொரு இக்கட்டான சூழலில் முகம் தெரியாத மனிதர்கள் மூலம் அந்த அதிர்ஷ்டம் வரலாம்.
எதிர்பார்க்காத நேரத்தில் நாமே நமக்கான அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கவும் செய்யலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், நமக்கான அதிர்ஷ்டத்தை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பது, எதிரில் வரும் ஆபத்து நடந்து முடிந்த பிறகு தான் நமக்கு தெரியவரும். அப்படி, தான் சாலையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் நொடிப்பொழுதில் காலன் விரித்த வலையில் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். ஏதோ புலம்பிக் கொண்டிருக்கும் அவர், சிறிது நொடியில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்கிறார். தரையில் காலை ஓங்கி உதைக்கிறார். அந்த நேரத்தில், அவர் நின்று இருந்த இடத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் மரத்தில் மோதி நிற்கிறது. மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் சில நிமிடங்களில் அரங்கேறுகின்றன.
அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்திலேயே இருந்திருந்தால், நிச்சயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியிருக்கக்கூடும். நல்வாய்ப்பாக அப்படியான விபத்தில் அவர் சிக்கவில்லை. இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
— What CouId Go Wrong (@whatcouIdGwrong) February 2, 2022