குக்கரில் ஆட்டுக்கறியுடன் காவல்நிலையத்திற்கு வந்த நபர்! திணறிய போலிஸ் அதிகாரி
வீட்டிற்கு வாங்கி சென்ற மட்டன் வேகாததால் அதனை குக்கருடன் காவல்நிலையத்திற்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேகாத மட்டன்
இந்திய மாநிலமான ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி காவல்நிலையத்திற்கு குக்கருடன் வந்துள்ளார். குறித்த நபரின் பெயர் ஹாஜி.
உகாதி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியிலிருந்து ஆட்டிறைச்சி கடையில் தலைக்கறி சமைப்பதற்காக வாங்கி சென்றுள்ளார்.
சுமார் 20 விசில் போட்டு பிரஷர் குக்கரில் சமைத்தாலும், வேகாமல் கல்லு போன்று இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பிரஷர் குக்கருடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதிகமாக பணம் கொடுத்து கறி வாங்கியதாகவும், அது தற்போது வேகாமல் இருப்பதாகவும் போலிசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த வினோத புகாரைக் கேட்டு போலிசார் ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்பு குறித்த கறிகடைக்காரரை வரவழைத்து அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் வயதான ஆடாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.
உடனே குறித்த நபர் வாங்கிய இறைச்சிக்கு பதிலாக வேறு தரமான இறைச்சியை கொடுப்பதாக கூறியுள்ளார். குறித்த போலிசாரும் இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுக்காமல், நேரம் செலவழித்து தீர்வு கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த நபருக்கு கறிகடைக்காரர் வேறு கறியை கொடுத்து அனுப்பிவைத்த நிலையில், பிரச்சனையும் முடிவிற்கு வந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |