5 ஆண்டுக்கு முன் தொலைந்த மூக்கு வளையம் - ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இளைஞர் ஒருவர் 5 ஆண்டுக்கு முன் தனது மூக்கில் அணிந்திருந்த வளையம் அவரது நுரையீரலில் சிக்கி இருக்கும் சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் நிபுணர் ஜோயி லிகின்ஸ் என்பவர் ரு நள்ளிரவில் அதிகப்படியான இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நிமோனியா இருக்கலாம் என மருத்துவர்கள் நினைத்தனர். இதனையடுத்து அவரது நுரையீரலை எக்ஸ்-ரே ஸ்கேன் செய்த போது தான் அவர்கள் அதிலிருந்த 35 வருட பழைய பொருளைப் கண்டுள்ளனர்.

இதை அவரிடம் தெரிவிக்க இதை தான் தேடிக்கொண்டிருந்தேன் என கூறியிருக்கிறார். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோயி தனது மூக்கில் அணிந்திருந்த வளையம் தான் அது.
அதிர்ஷ்டவசமாக அது அவரது நூரையீரலில் எந்த காயத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. இது வரை உடலில் 16 இடங்களில் துளையிட்டுள்ள இவர், இனி இந்த மூக்கு வளையத்தை அணியப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதனை நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்ளப் போகிறாராம்.