Viral Video: சட்டென கடலுக்குள் குதித்த நபர்! டீசர்ட்டில் மாட்டிய மீனைப் பாருங்க
படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவர் கூட்டமாக நின்ற மீனைப் பார்த்து சட்டென கடலுக்குள் குதித்து டீ-சர்ட்டில் மீன் பிடித்து அசத்தியுள்ளார்.
டீ-சர்ட்டில் மீன் பிடித்த நபர்
அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடித்த உணவு என்றால் அது கடல் உணவுகள் தான். கடலில் வாழும் பல வகையான மீன்களை வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிடுவது அவ்வளவு பிரியமாக இருக்கின்றது.
கடல் மீனை சாப்பிடுவது மட்டுமின்றி அவற்றினை பிடித்துக் கொண்டு வரும் காட்சிகளும் அட்டகாசம் என்று சொல்லலாம்.
அப்படி இங்கு நபர் ஒருவர் டீ-சர்ட்டில் மீன் பிடித்துள்ள காட்சியினையே காணப்போகின்றோம்.
கடலுக்குள் படகில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் கூட்டமாக இருக்கும் மீனைக் கண்டு உடனே கடலுக்குள் குதித்துள்ளார்.
சற்றும் தாமதிக்காமல் தனது டீ-சர்ட்டினால் மீன்களை பிடித்துக் கொண்டு மீண்டும் படகுக்குள் வந்துள்ளார். அவர் டீ-சர்ட் மூலமாக பிடித்துள்ள மீன்களை நீங்களே காணலாம்.
Just a shirt is enough pic.twitter.com/MGTyMgkKf0
— Aulia dr (@DonaldTunp75739) August 23, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
