கைக்குட்டையை எடுக்க சென்ற மனிதர்! நொடியில் உயிரிழந்த சோகம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மின்சார கம்பியில் விழுந்த கைக்குட்டையை எடுத்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைக்குட்டையை எடுக்க சென்ற நபர்
கர்நாடக மாநிலம் உதயகிரி பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா என்பவர் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அவர், பால்கனியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்றுள்ளார். அப்போது கைக்குட்டை ஒன்று மின்சார கம்பியில் சிக்கியுள்ளது.
பின்பு ஒட்டரை அடிக்கும் குச்சியை எடுத்துக்கொண்டு, கையில் ஒரு துணியை சுற்றிவிட்டு அதை வைத்து கைக்குட்டையை எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்பொழுது ஒட்டரை குச்சி உலோகத்தால் ஆனதால், மின் ஒயரில் மோதி மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மல்லப்பா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கதறிய குடும்பத்தினர்
மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டதில் ஓடிவந்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். பின்பு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படடு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உடலைக்கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசாதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மின்சார கம்பியில் விழுந்த கைக்குட்டையை எடுக்க சென்று மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.