சீக்கிரமா உடல் எடையை குறைக்கனுமா? பப்பாளியுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க
உடல் எடையைக் குறைப்பதற்கு பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இரண்டு பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எடை குறைப்பு
இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும்.
உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல வியாதிகள் வந்துவிடுகின்றது. ஆதலால் தற்போது பெரும்பாலான நபர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதுடன் பணத்தை அதிகமாக செலவு செய்து மருந்தும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
image: pinterest
ஆனால் பப்பாளி உங்களது எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன் உடல் எடையையும் குறைக்கும். இன்னும் பப்பாளியுடன் இரண்டு பொருட்கள் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகமாகவே கிடைக்கும்.
சியா விதைகளுடன் பப்பாளி
நார்ச்சத்து அதிகம் கொண்ட சியா விதைகளை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் குறையும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும், எடை இழப்பிற்கு சிறந்த பொருளாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கப் பப்பாளி துண்டுகளில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.
ஆளி விதைகளுடன் பப்பாளி
பப்பாளி மற்றும் சியா விதைகளுடன், நீங்கள் பப்பாளி மற்றும் ஆளி விதைகளையும் சாப்பிடலாம். இந்த இரண்டும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
ஆளி விதைகளில் ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கின்றது.
ஒரு கப் பப்பாளி துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து நன்கு கலக்கவும். இதையும் காலை உணவாகவும் சாப்பிடலாம்.
மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் வெளி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |