காதலியின் தாய்க்கு கிட்னியை தானம் செய்த காதலன்: காதலி செய்த நன்றிக்கடன் என்ன?
காதலியின் தாய்க்கு கிட்னியை தானமாக வழங்கிய இளைஞரைக் கழட்டிவிட்ட காதலி வேறொரு நபரை திருமணம் செய்த சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
பாஜா கலிஃபோர்னியாவில் வசித்து வரும் ஆசிரியர் உஜேயேல் மார்டினெஸ் என்பவர் தனது காதலியின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார்.
இவரின் தியாகத்தினை புரிந்து கொண்டு இவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய காதலி ஒரே மாதத்தில் இவரைக் கழட்டிவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த இளைஞரின் குமுறல் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். முன்னேறிச் செல்லுங்கள். உங்களுக்கான பெண் உங்களுக்கு நிச்சயம் கிடைப்பார் என்று கூறி மார்டினெஸுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆரம்பத்தில் காதலி செய்த கசப்பான சம்பவத்தினை வெளியிட்ட காதலர் தற்போது தனது காதலி யாருடன் இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் அவரது வாழ்க்கையை கெடுக்க மாட்டேன் என்று மற்றொரு பதிலை வெளியிட்டுள்ளார்.
[FBRHY5 ]