Viral Video: வங்கியில் பணம் எடுக்க தங்கையின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த நபர்
நபர் ஒருவர் தன் தங்கையின் வங்கிப் பணத்தை எடுக்க முயன்று ஆவணம் இல்லாத காரணத்தினால் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
ஒடிசா கியோஞ்சர் மாவட்டத்தில் ஜிது முண்டா (55) என்பவர் தனது இறந்த தங்கை கக்ரா முண்டாவின் வங்கி பணம் ரூ.19,300 பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார்.
தேவையான ஆவணங்கள் இல்லாததால் வங்கி பணத்தை கொடுக்க மறுத்ததால், அவர் சுடுகாட்டிலிருந்து தங்கையின் எலும்புக்கூட்டை ஆதாரமாக கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்த போது அவர் அவர் பதிலளித்துள்ளார்.

விளக்கிய நபர்
அப்போது அவர் கூறியிருப்பது "நான் பலமுறை வங்கிக்கு அலைந்து திரிந்தேன்.
வங்கி ஊழியர்கள், கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுப்பதற்காகக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டார்கள்.
அப்போது நான், அவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை அவரை வங்கிக்கு அழைத்து வருமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

அதனால், வேறு வழியின்றி, நான் கல்லறையைத் தோண்டி, அவர் இறந்ததற்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டை வெளியே எடுத்தேன்," என்று வெகுளித்தனமாக கூறி உள்ளார்.
தற்போது இந்த விடயம் குறித்து மக்கள் வங்கி நடைமுறைகள் மற்றும் மனிதாபிமானம் பற்றி விமர்சித்து வருகின்றனர்.
#WATCH : In a shocking incident from Odisha, a man reportedly brought the skeleton of his deceased sister to a bank after staff allegedly asked him to bring the account holder in person to withdraw around ₹20,000. The unusual protest has sparked widespread attention.#Odisha… pic.twitter.com/XEpVKaPVo6
— upuknews (@upuknews1) April 28, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |