திருமணத்தில் நடனமாடிய நபர்! சுருண்டு விழுந்து பரிதாப மரணம்
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிய போது ஏற்பட்ட மாரடைப்பு
சமீப காலமாக திருமண நிகழ்வுகளில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருக்கும் நபர்கள் திடீரென கீழே சரிந்து விழுந்து உயிரிழப்பதை நாம் அதிகமாக அவதானிக்க முடிகின்றது.
இங்கும் அம்மாதிரியாக சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம் மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 32 வயது இளைஞர் திடீரென நெஞ்சை பிடித்து கீழே விழுந்துள்ளார். இதனை அவதானித்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், குறித்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
தற்போது, இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.