நாய் குட்டியை காப்பாற்ற முயன்ற இளைஞர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
நாய் குட்டியை காப்பாற்ற சென்ற வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
நாய்க்குட்டியை காப்பாற்ற சென்ற இளைஞர்
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபன் (28). சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் இவர், ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்துவருவதுடன், இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் நாய்குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர்.
மகள்களின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த தீபன் நாய் குட்டி ஒன்றினை வாங்கிக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, நாய்க்குட்டி கீழே விழுந்துள்ளது.
அப்போது நாய்க்குட்டியை தூக்க முயன்ற இளைஞர், இருசக்கர வாகனத்தினை நிறுத்தாமலே முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் டிவைடரில் மோதி, தீபன் பலத்த காயமடைந்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் கீழே விழுந்த நாய்க்குட்டியை தீபன் தூக்க முயன்றுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் டிவைடரில் மோதியது, இதில் தீபன் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிள்ளைகள் விரும்பியபடி நாய்க்குட்டியை அழைத்து வர சென்ற தந்தை இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.