இரவில் மட்டன் சாப்பிட்டவர் மரணம்
தமிழகத்தில் போதையில் மட்டன் சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அடுத்த நாகூரை சேர்ந்தவர் அரவிந்தன்(வயது 28), சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிமுடிந்து அரவிந்தன் வீட்டிற்கு வந்துள்ளார், வரும்போதே மது குடித்துவிட்டு போதையில் வந்ததாக தெரிகிறது.
வீட்டிற்கு வந்ததும் மட்டன் குழம்பை சாப்பிட்டுள்ளார், ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே திடீரென அரவிந்தன் மயங்கி விழுந்தார்.
உடனே பதறிப்போன குடும்பத்தினர், அரவிந்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அரவிந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போதையில் அதிகளவு மட்டன் சாப்பிட்டதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர், அரவிந்தனின் திடீர் மரணம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த நாகூர் போலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.