உலகின் மிகவும் அதிர்ஷ்டக்கார மனிதர் இவர் தானாம்!! ஏன்னு தெரியுமா?
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர்கள் லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதால் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தை சேர்ந்தவர் ஆல்வின் கோப்லேண்ட், கடந்த 2002ம் ஆண்டு லொட்டரியில் இவருக்கு 1 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்தது.
தற்போது இவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு, 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளதாம்.
இதுகுறித்து ஆல்வின் கூறுகையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும்போல நான் லொட்டரி டிக்கெட் வாங்கும் போது என்ன எண்ணில் வாங்குவேனோ அதையேதான் இப்போதும் வாங்கி இருந்தேன். அதற்குதான் ஜாக்பாட் அடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஸ்காட்டி தாமஸ் என்ற நபர் 2 டொலருக்கு வாங்கிய லொட்டரி சீட்டுக்கு, பரிசு விழுந்துள்ளதாம், அதாவது மாதம் 25,000 டொலர் பரிசாக கிடைக்குமாம்.
