நாயாக மாறிய மனிதர்... முதன்முறையாக வெளியாக காணொளி
ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர் நாயாக மாறிய காணொளி வெளியாகியுள்ளது.
நாயாக மாறிய மனிதர்
ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர் பல ஆயிரத்தை செலவு செய்து நாயாக மாறியுள்ளார். அதாவது 22 ஆயிரம் யென் செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 12 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் (Zeppet), மனிதர்களுக்கு ஹைப்பர்-ரியலிஸ்டிக் நாய் வேஷத்தை உருவாக்கியுள்ளது.
இதற்காக 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மாடல் காலி இனத்தைச் சேர்ந்த நாயைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே நான்கு கால்கள் இருப்பது போன்று வைத்துள்ளனர்.
குறித்த நபர் ‘I want to be an animal' (நான் மிருகமாக இருக்க விரும்புகிறேன்) என்ற தனது சேனலில் இந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.
நாயாக மாறிய அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "நான் இப்போது ஒரு காலி நாய் ஆகிவிட்டேன். நான் ஒரு விலங்காக வேண்டும் என்ற என் சிறுவயது கனவை நான் நிறைவேற்றினேன்!" என்று கூறியுள்ளார்.