தலையில் ப்ரிட்ஜை வைத்து அசால்ட்டாக சைக்கிள் ஓட்டும் இளைஞன்: பார்ப்பவர்களை குழப்பும் வைரல் வீடியோ
பொதுவாக இணையத்தில் அதிகமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதில் ஒவ்வொருவரும் தங்களின் அசாத்திய திறமைகளை காணொளியாக எடுத்து அவற்றை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
அதில் தற்போது ஒரு காணொளி ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு இளைஞன் இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிள் ஓடிக் கொண்டிருக்கிறார்.
தலையில் பாரமான குளிர்சாதன பெட்டியை வைத்துக் கொண்டு எப்படி சைக்கிள் ஓட்ட முடியும் என்று பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
இந்த வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராமில் @barstoolsports என்ற பயனர் "உலகின் வலிமையான கழுத்து" என்று குறிப்பிட்டு இந்த காணொளியை பகிர்ந்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |