மனிதனின் தோளில் துண்டாக மாறிய ராட்சத மலைப்பாம்பு: அசால்ட்டாக தூக்கி செல்லும் காட்சி
இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன. பல சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில் ராட்சத மலைப்பாம்பை தோளில் சுமந்தபடி ஒரு மனிதன் அசால்டாக செல்லும் வீடியோ நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும்.
இந்த ஆச்சரியமான வீடியோ (Viral Video) மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டதோடு, ஏராளமான மக்கள் இதற்கு தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் அந்த மனிதன் ராட்சத நாகத்தை தோளில் சுமந்து கொண்டு அசால்டாக நடப்பதைக் காணலாம். சில நொடிகளுக்கான வைரலாகி வரும் வீடியோவில் சுமார் இருபது அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை தனது தோளில் தூக்கிச் செல்வதைக் காணலாம். இவ்வளவு நீளமான மற்றும் கனமான பாம்பைக் கண்டு அந்த நபர் பயப்படாமல் செல்வதையும் நீங்கள் பார்க்கலாம்.
அவர் மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் போது, அவர் மலைப்பாம்பு தலையை தூக்கி வாயை திறப்பதைக் காணலாம். ஆனால், அவருக்கு இதனால், எந்த விதமான சலனமும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு வருடம் பழமையானது என்றாலும், சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாகும். இது இன்ஸ்டாகிராமில் hepgul5 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் நெட்டிசன்கள் கடுமையாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.