இறந்த மனைவியின் சடலத்தை தனி ஆளாக தூக்கிச்சென்ற கணவர்: கலங்க வைக்கும் காட்சி
உயிரிழந்த மனைவியின் சடலத்தை கணவன் தனி ஆளாக தூக்கிச் சென்ற காட்சி காண்பவரைக் கண்கலங்க வைத்துள்ளது.
ஒடிசாவில் நபர் ஒருவர் தனது மனைவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இறந்த அவரது சடலத்தை 2 வது மாடியில் இருந்து கீழே இருக்கும் வாகனத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் யாரும் உதவவில்லை.
இதனால் இறந்தவரின் கணவரே, தனி ஆளாக தனது மனைவியை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Odisha | Tribal man carries wife’s corpse after hospital staff refuses to help
— Hindustan Times (@htTweets) July 2, 2021
His wife died following cardiac arrest. Kanhar asked hospital staff to help him carry his wife’s body to the hearse van but nobody came forward. pic.twitter.com/MFPpLUCsVH