மகளின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை! சோகத்தின் பின்னணி என்ன?
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு தந்தை கொண்டு சென்றுள்ள சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மகளின் சடலத்துடன் தந்தை
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்டோலில் புதர் பிளாக்கின் கோட்டா கிராமத்தில் வசிக்கும் லஷ்மன் சிங் கவுட். இவரது மகள் மாதூரி (13) கடந்த 12ம் தேதி sickle cell என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குறித்த குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர்.
MP | Shahdol
— काश/if Kakvi (@KashifKakvi) May 16, 2023
लक्षमण सिंह गोंड (आदिवासी) की 13 साल की बेटी माधुरी की सिकल सेल बीमारी से मौत हो गई।
एंबुलेंस मांगने पर अस्पताल में कहा: अनुमति 15 किमी तक की है 70 किमी के लिए अपना इंतज़ाम करो।
प्राइवेट एंबुलेंस बजट में नहीं था तो लक्षमण बेटी का शव बाइक पर लेकर चल पड़े।
1/2 pic.twitter.com/aFDBp4DgLu
15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் வழங்க முடியும் என்றும், 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க முடியாது என்று நிர்வாக குழுவினர் கூறி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாதுரியின் தந்தை லஷ்மண் சிங் கவுட் கூறுகையில் 15 கிலோ மீட்டருக்கு மேல் ஆம்புலன்ஸ் வழங்க முடியாது என கூறி மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார்.
ஆதலால் தங்களிடம் பணம் இல்லாததால் இவ்வாறு இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றதாக கூறியுள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர், குறித்த நபருக்கு வாகன உதவி செய்ததுடன், அவருக்கு பணஉதவியும் செய்துள்ளார்.