43 கோடிக்கு விற்கப்பட்ட ஹீரோவின் புகைப்படம்.. இவ்வளவு விலை கொடுக்க என்ன காரணம்?
பழங்கால பொருட்கள் எப்போதும் விலை மதிப்பு வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.
இதன்படி, பல ஆண்டுகளுக்கு முன்னர் “ராண்டி குய்ஜாரோ” என்ற ஒருவர் ஒரு பழைய புகைப்படத்தை $2 (ரூ. 173) க்கும் குறைவான விலையில் வாங்கியிருக்கிறார்.
அந்த புகைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு புகைப்படத்தில் இருப்பவர் சாதாரண நபர் மட்டுமல்ல, அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான ஒரு நபர் என்பதனை பலரும் அறிந்து கொள்கிறார்கள்.
இதன்போது அவரின் புகைப்படம் ஏலம் விடப்பட்டு, அது ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்த ஊடகங்கள் படத்தின் கதை குறித்து ஆராய ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், $2 வாங்கிய புகைப்படம் ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது ஏன்? என்பதனை எமது பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
அந்த நாயகன் யார்?
பில்லி தி கிட் என அழைக்கப்பட்ட ஹென்றி மெக்கார்ட்டி அல்லது வில்லியம் எச். போனி என்பவர் கடந்த 1859 இல் பிறந்தார். அவர் ஒரு சட்டவிரோதி மற்றும் துப்பாக்கிச் சண்டை வீரராகவும் பார்க்கப்பட்டார்.
இவர் மீது 9 கொலை வழக்குகள் அந்த காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கதாநாயகனாக இருந்த ஹென்றி மெக்கார்ட்டி, லிங்கன் கவுண்டி ஷெரிப் பாட் காரெட் என்பவரால் கடந்த 1881ஆம் ஆண்டு 21 வயதிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில வரலாற்றாசிரியர்கள் அவர் ஒன்பது பேரை மட்டுமே கொன்றதாக மதிப்பிடுகின்றனர். அவரது முதல் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் 1880 இல் எடுக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படமாகும், அந்த புகைப்படம் 2011 இல் $2.3 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாவது புகைப்படம் தான் ரூ. 43 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஏனெனின் அவருக்கு அமெரிக்காவில் நிறைய ரசிகர்கள் இருந்துள்ளனர்.
கடைசியாக புகைப்படத்தை வைத்திருந்த நபருக்கு கோடிகளில் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |