விஜய்சேதுபதி மீது தாக்குதலா? உண்மையாகவே நடந்தது இதுதான்- வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து உண்மையான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அந்த வீடியோவில், விமான நிலையத்தில் சிஆர்பிஎப் பாதுகாப்பில் செல்லும் விஜய்சேதுபதியை பின் தொடர்ந்து வந்த ஒருவர் ஓங்கி மிதிக்கிறார். உடனே அவருடன் வந்த சிலர், அந்த நபரை பிடிக்க முயற்சிக்கின்றனர்.
நிலை தடுமாறிய விஜய் சேதுபதி, அந்த நபரை நோக்கி ஓடுவது போன்ற காட்சிகள் இருந்தன.
இந்த வீடியோ வைரலானதும் பலரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட தொடங்கினர்.
தமிழ்- கன்னடம் என்றெல்லாம் கமெண்டுகள் பதிவிடப்பட்டன், இந்நிலையில் இதுதொடர்பில் தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது.
விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி, அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நடந்த தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய் சேதுபதியை அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் #விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய்சேதுபதியை அல்ல#VijaySethupathi #Bengaluru pic.twitter.com/jRvcVuIA1A
— Senthil Nathan A (@senthu_ap) November 3, 2021