படமெடுத்து நின்ற ராட்சத கருப்பு ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடித்த நபர்! வைரலாகும் காணொளி!
பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகம் படமெடுத்து நிற்கும் போது, கொஞ்சமும் பதற்றமின்றி நபரொருவர் தண்ணீர் குழாயை கொண்டு பாம்பை அசால்ட்டாக பிடித்த காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றால் பெரும்பாலான மக்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். குறிப்பாக பாம்புகளின் ராஜாவாக கருப்படும் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதன் பெயரை கேட்டாலே சிலர் தலைதெறிக்க ஓடுவார்கள்.
காரணம் ராஜ நாகங்கள் கொடிய விஷம் கொண்டவையாக இருப்பதுடன், விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டவை.
ராஜ நாகத்தை பார்த்தால் ஏனைய பாம்புகளே கூட அச்சப்படும் என்றால், மனிதர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா?
இந்நிலையில், படமெடுத்து நின்ற ராட்சத கருப்பு ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடித்த நபரொருவரின் மிரள வைக்கும் செயல் அடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |