நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட பாணியில் ஒரே இரவில் 20 வருடத்தை துளைத்த நபர்! தூங்கி எழும் போது மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான டேனியல் பீட்டர் என்ற நபர் ஒருவர் ஒரே இரவில் 20 வருட வாழ்க்கையை மறந்து விட்டதாகவும் தற்போது அவர் 16 வயது பள்ளிச் சிறுவன் போல் செயல்படுவதாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு கிரிக்கெட் விளையாடும்போது காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக திடீரென அவர் பழைய நினைவுகளை மறந்து விடுவார்.
அதேபோல் டேனியல் பீட்டர் தூங்கி எழுந்ததும் தான் 16 வயது சிறுவன் போல உணர்ந்தாராம்.
தனக்கு திருமணமாகி பத்து வயதில் ஒரு மகள் இருப்பதையும் மறந்து அவர் செயல்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது அவரது மனைவியையும் மகளையும் பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்திருக்கிறார்.
முதலில் விளையாட்டுத்தனமாக தனது கணவர் ஏதோ சொல்கிறார் என்பதை நினைத்துக் கொண்ட மனைவி அதன்பின் சீரியஸை உணர்ந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அவருக்கு டிரன்சியண்ட் குளோபல் அம்னீஷியா என்ற நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.
நன்றாக தூங்கினால் போகப் போக சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது ஒரு ஆண்டுக்கு மேலாகியும் டேனியலுக்கு இன்னும் பழைய நினைவுகள் திரும்பவில்லை.
இந்த அவரது மனைவி தனது கணவரை இன்னொரு குழந்தையாகவே பாவித்து வருவதாகவும் தற்போது அவர் செய்யும் குழந்தைத்தனமான செயல்களை ரசிக்கத் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி அவர் விரைவில் குணமாகி விடுவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.