112 மூட்டைகளில் நாணயங்களை கொட்டிய இளைஞர்! கனவு பைக்கை வாங்க அரங்கேறிய போராட்டம்
112 மூட்டைகளில் ஒரு ரூபா நாணயத்தினைக் கொடுத்து தனது கனவு ஸ்போர்ட்ஸ் பைக்கை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார்.
நாணயத்தை கொடுத்து கனவு பைக்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
ஒரு கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தைரியம், நேரம் மற்றும் அரப்பணிப்பு ஆகியன எவ்வளவு அவசியம் என்பதனை படிப்பினையாக கூறும் ஒரு சம்பவமாக இந்த சம்பவம் கருதப்படுகின்றது.
சுமார் 112 மூட்டைகளில் ஒரு ரூபாய் நாணயங்களை சேமித்து அந்த பணத்தை கொடுத்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளார். சுமார் ரெண்டு லட்சத்து 85 ஆயிரம் பணம் இந்த நாணயங்கள் மூடைகளில் காணப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ராமகிருஷ்ணப்பூர் தரகரமா காலணியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு வித்தியாசமான முறையில் பைக்கை கொள்வனவு செய்துள்ளார்.
தெலுங்கானா கல்லூரி ஒன்றில் பாலிடெக்னிக் பயின்று வரும் மாணவர் வெங்கடேஷ் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
பைக் விற்பனை காட்சியறையில் முதலில் இந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய நிலையில், பின்பு இளைஞரின் அர்ப்பணிப்பை மதிக்கும் வகையில் அந்த நாணயங்களை எண்ணி பைக்கை விற்பனை செய்துள்ளனர்.