கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழக்கும் பிரபலம்! அரிய வகை நோயால் பாதிப்பு
நடிகை மம்தா மோகன் “விட்டிலிகோ” என்ற சரும நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் இவரின் சரும நிறம் மாறிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளின் ஒருவரான மம்தா மோகன் கடந்த 2006-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாக “சிவப்பதிகாரம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதற்கு அடுத்தபடியாக குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் குறைவான வரவேற்பையே பெற்றுள்ளதால் பெரியளவு இவருக்கு ரசிகர்கள் இல்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மம்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அரியவகை நோயின் தாக்கம்
அந்த வகையில் தற்போது மம்தா மோகன் “ஆட்டோ இம்யூன்” எனப்படும் “விட்டிலிகோ நோய்” பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் இவருடைய நிறம் மாற்றம் அடைவதாகவும் பகிர்ந்திருந்தார்.
நடிகையை தாக்கிய “விட்டிலிகோ” என்பது காலப்போக்கில் தோலின் நிறத்தை இழக்க செய்யும் ஒரு அரிய வகை நோயாகும். இவ்வாறு தொடர்ந்தால் நடிகை மம்தா மோகனின் நிறம் காலப்போக்கில் மாற்றமடையும்.
இதனால் இவர் நடிக்கும் வாய்ப்புகள் குறைவடையும் எனவும் நடிகை கூறாமல் கூறுகிறார். மேலும் இந்த நோயான கை கால் உதடு முடி என உடலிலுள்ள அணைத்து பாகங்களில் இருக்கும் நிறத்தையும் இழக்க செய்யும். ஆனால் இதற்கான சிகிச்சைகள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.