72 வயதிலும் மகனுடன் போட்டி போட்டு நடிக்கும் மம்முட்டி: எத்தனை கோடிகளுக்கு அதிபதி தெரியுமா?
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகர் மம்முட்டியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மம்முட்டி
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாரா வலம் வரும் மம்முட்டி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. 1991 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த திரைப்படம் தளபதி அது தான் அவரின் முதல் தமிழ் படம்.
அதற்குப்பிறகு மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் இவர் மட்டுமல்ல இவரின் மகன் துல்கர் சல்மானும் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.
சொத்துமதிப்பு
நடிகர் மம்முட்டிக்கு தற்போது 72 வயதாகின்ற நிலையில் இன்னும் இளமையாகவும், துடிப்பாகவும் நடித்துவருகிறார். இவ்வாறு சினிமாவில் கொண்டாடப்படும் இவரிடம் இருக்கும் சொத்து விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
மம்மூட்டிக்கு மொத்தம் 360 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைராலி டிவியின் ஓனரும் மம்மூட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் வணிகத்துறையில் முதலீடு செய்து பல இலாபங்களையும் பார்த்து சம்பாதித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |